இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டைகள் வருகிறது
அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமிலா இத்தமல்கொட தெரிவித்தார்.
இறக்குமதி தொடர்பாக கால்நடை துறை மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறுகையில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், முட்டையின் விலை ரூ.48 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
5.5 மில்லியன் தேவை இருந்தாலும் தற்போது 5 மில்லியன் முட்டைகள் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுவதாக சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.
இரண்டு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யும் போது மகோடிஸ்மார்களின் கமிசன் இருபது இலட்சம் இந்தியன் ரூபாய். எப்படி முட்டை வியாபாரம்.
ReplyDelete