Header Ads



இலங்கையிலிருந்து வெளியேறும் 2 ஜப்பானிய நிறுவனங்கள்


இரு ஜப்பானிய நிறுவனங்கள் இலங்கையிலுள்ள தமது அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளன.


அதனடிப்படையில், ஜப்பான் தாய்சே மற்றும் மிட்சுபிஷி (Mitsubishi) நிறுவனங்களின் அலுவலகங்களே இவ்வாறு மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு குறித்த நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.


மிட்சுபிஷி நிறுவனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகம் எதிர்வரும் மார்ச் மாதம் மூடப்படவுள்ளதுடன் தாய்சே நிறுவனத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அயல் நாடுகளின் பிரதிநிதிகளால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.