2 சிறுவர்களின் சடலங்கள் மீட்பு - தாய் கைது
- உமாமகேஸ்வரி -
இரத்தினபுரி -குருவிட்டபொலிஸ் பகுதியிலுள்ள புனித ஜோக்கிம் தோட்டத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்களை குருவிட்ட பொலிஸார் இன்று (20) பிற்பகல் 2 மணியளவில் மீட்டுள்ளனர்.
புனிதஜோக்கிம் தோட்டத்திற்குட்பட்ட 16 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த குறித்த சிறுவர்களுள் ஒருவர், புனித ஜோக்கிம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 02 இல் கல்வி கற்று வரும் சரவனா மற்றையவர் அவரின் ஒன்றரை வயது சகோதரன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர்களையும் தாயையும் கடந்த இரு நாட்களாக காணவில்லையென கூறி , தந்தை தனது மனைவியின் சொந்த ஊரான களுத்துறைக்கு சென்றிருந்த நிலையிலேயே இச்சிறுவர்கள் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் தாயும் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுவர்கள் இருவரும் தாயால் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment