பூகம்பத்தில் 2 முறை மீட்கப்பட்ட தாயும் குழந்தையும்
சிரியாவில் பூகம்பத்தால் தாய் மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தை இருவரும் இரு முறைகள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பூகம்பம் ஏற்படும்போது ஏழு மாத கர்ப்பணியாக இருந்த திமா என்ற பெண், ஜின்டைரிஸ் நகரில் உள்ள தனது வீட்டின் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
அப்போது சிறு காயங்களுக்கு உள்ளான அவர் அப்ரினில் உள்ள சிரிய அமெரிக்க மருத்துவ சங்கத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
மூன்று நாட்களின் பின் சேதமடைந்த வீட்டுக்கு அவர் குழந்தையுடன் திரும்பிய நிலையில் அந்த வீடு முழுமையாகத் தரைமட்டமாகியுள்ளது. இந்நிலையில் அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டிருப்பதோடு மீண்டும் ஒருமுறை இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தாய் காலில் மோசமான காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குழந்தையின் உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment