மண்ணெண்ணெய் அருந்திய 2 வயது குழந்தை உயிரிழப்பு
நிட்டம்புவ பிரதேசத்தில் 02 வயது குழந்தையொன்று மண்ணெண்ணெய் அருந்தி உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் இருந்த மண்ணெண்ணெயை குடித்ததாக குழந்தையின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் குடித்த குழந்தை வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment