Header Ads



200 அடி பள்ளத்தில் விழுந்த கார் - பொலிஸ் சார்ஜன்டின் மனைவி உயிரிழப்பு


மாத்தளை ரத்தோட்ட ரிவஸ்டன், கோனமட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


200 அடி பள்ளத்தில் கார் கீழே விழுந்ததில் இந்த விபத்து இடம்பெறுள்ளது. பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவி உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடடைந்துள்ளனர்.


மாத்தளை உக்குவெல குர்லவெல பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்டின் மனைவியான 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான திலாருக்ஷி விக்ரமசிங்க என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.


மாத்தளை தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தனது குடும்பத்துடன் ரிவஸ்டன் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்துக்குள்ளானார்.


இந்த விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது 11 வயது மகள், பொலிஸ் அதிகாரியின் தாய் மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆகியோரும் காயமடைந்துள்ளதுடன் அவர்களும் மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.