2,000 ரூபா நோட்டுகளை திரும்பப் பெறுமாறு கோரிக்கை
2000 ரூபா நோட்டுக்களை நிதி அமைப்பில் இருந்து வாபஸ் பெறப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் , பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், நாட்டில் “கறுப்புப் பண” சந்தை செழித்து வருகிறது.
ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவது குறித்த அறிவிப்பு வெளியானால், “கறுப்புப் பணம்” அம்பலமாகும் என்றார்.
ஊழலை ஒழிப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது எனவும், இது தொழிலாளர் வர்க்கத்தின் சுமையையும் குறைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். TL
Post a Comment