Header Ads



துருக்கியும், சிரியாவும் 2 ஆவது தடவையாக குலுங்கியது - உயிரிழப்பு 2000 ஆக உயர்வு, 6000 பேர் காயம் (படங்கள்)



துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.


சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.


உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது


கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.


உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.







No comments

Powered by Blogger.