19 கொலைகள் புரிந்தவன் தப்பியோடிய விவகாரம், பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச்சென்றமை தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பொலிஸ் சார்ஜனை மார்ச் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் சம்பிக்க ராஜபக்ஷ விமான நிலைய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியையும் ஏனைய இரு பொலிஸ் கான்ஸ்டபல்களையும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆள் பிணையில் விடுவித்தார்.
19 கொலைகள் தொடர்பான சந்தேகநபரான கழுத்தறை தெற்கைச் சேர்ந்த 28 வயதான கோரலே கங்கானமலாகே ரவிந்து வர்னரங்கன என்பவர் 25 ம் திகதி நடுநிசி 12.30 மணியளவில் டுபாய் நோக்கிச் செல்ல வந்த போது அவரை பொலிஸார் கைது செய்ய தேடுவதாகவும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிந்த குடிவரவு குடி அகழ்வு அதிகாரிகள் அவரை கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸாரிடம் ஒப்படைத்து சந்தேக நபரை பார்வையிட வந்துள்ளதாகவும் கதிரையில் உட்கார்ந்திருந்த சந்தேக நபர் பொலிஸ் கைதிலிருந்து தப்பி பிரதான வீதிக்குச் சென்று வாகணம் ஒன்றில் ஏறிச்சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் சார்ஜன் ஒருவரும் இரு பொலிஸ் கான்ஸ்டபல்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை நீர்கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பொலிஸ் சார்ஜன் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஏனைய மூவரும் பிணையில் விடு வைக்கப்பட்டனர்.
Post a Comment