Header Ads



உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 19 க்கு முன்னர் கட்டாயமாக நடத்த வேண்டும்


உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


இன்று -25- யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் உள்ளன. விலைவாசி அதிகப்பினாலும் வரி அதிகரிப்பினாலும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. பலருக்கு வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத கடும் கஷ்டமான நிலை காணப்படுகின்றது.


அப்படியான சூழ்நிலையிலே இந்த உள்ளூராட்சி தேர்தல் என்கின்ற விடயத்தை பேசு பொருள் ஆக்கி நாட்டிலே அதைக் குறித்த ஒரு சர்ச்சையை உருவாக்கி மக்களுடைய கவனத்தை அதன் பால் திருப்புவதற்காகவும் சில முயற்சிகள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திசை திருப்புவதற்காக அரசாங்கம் சார்பிலும் ஜனாதிபதி சார்பிலும் முயற்சிகள் நடைபெற்றாலும் கூட தேர்தல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு விடயம்.


ஒரு நாடு ஜனநாயக நாடா இல்லையா என்பதை தீர்மானிப்பது உரிய காலத்திலே தேர்தல்கள் கிராமமாக நடத்தப்படுவது முக்கியமான ஒரு அம்சமாகும். ஆகையினாலே நாட்டிலே பாரிய மாற்றங்கள் சென்ற வருட நடுப்பகுதியிலே இடம்பெற்றன.


தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதாவது ஜனாதிபதி நாட்டை விட்டு ஓடினர். பிரதமர் தானாக பதவி விலகினாலும் கூட தங்களுடைய பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் ஆட்சியை தொடர்ந்து வருவதோடு நாட்டை ஆட்டிப் படைக்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.


இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மிகவும் முக்கியமான ஒரு கருத்துக்கணிப்பாக அனைவராலும் நோக்கப்படுகின்றது நாட்டு மக்களின் அரசியல் நோக்கம் என்ன என்பது இந்த தேர்தல் ஊடாக வெளிப்படவுள்ளது.


தேர்தல்களை நடத்தாது பின் போடுவது என்பது நாட்டினுடைய சுபாவத்தை மாற்றிவிடும் எனவே உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன அது அந்த படியே நடத்தப்பட வேண்டும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது


அதற்கு ஏற்ற விதமாக நிதியமைச்சும் ஆரம்ப விடயங்களுக்கென்று சிறு சிறு தொகைகளை ஏற்கனவே கொடுத்து இன்று வரைக்கும் 100 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.


அதற்கு மேலே எதையும் கொடுப்பதற்கு நிதியமைச்சருடைய அனுமதி இல்லாமல் என்னால் கொடுக்க முடியாது என்று திறைசேரியின் செயலாளர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றார்.


நிதி அமைச்சராக இருப்பவர் நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதேபோல ஐக்கியதேசிய கட்சியின் தலைவராகவும் இருப்பவர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் கொழும்பு மாநகர சபையை அண்டிய பகுதிகளில் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றது.


தேர்தல் ஒரு அத்தியாவசியமற்ற தேவை என ஜனாதிபதி கூறுவதை நாங்கள் மறுக்கின்றோம். ஜனநாயக நாடு என்கின்ற சுபாவத்தை நாங்கள் தொடர்ந்து பேணுவதாக இருந்தால் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.


தேர்தலை பிற்போட முடியாது. இது ஒரு அத்தியாவசியமான தேவைப்பாடு தேர்தல் நடத்துவதற்கு பணம் தேவை அதை யார் யாருக்கு செலுத்துவது என்ற கேள்வி உள்ளது.


எங்களைப் பொறுத்தவரை மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் ஏற்கனவே காலம் தாழ்த்தப்பட்டுள்ளது.


அதேபோல ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடாது கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். ஒன்பதாம் திகதி சாத்தியமற்றது என கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அத்தோடு மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டு ஆக வேண்டும்.


அதை தேர்தல் ஆணைக்குழு செய்யும் என எதிர்பார்க்கின்றோம். அரச ஊழியர்கள் ஜனாதிபதியாக இருக்கலாம் நிதி அமைச்சராக இருக்கலாம். ஆனால் எந்த கோதாவிலும் தேர்தலை நடத்துவதை தடுக்கிற செயற்பாட்டிற்கு அவருக்கு உதவியாக செயற்படக்கூடாது என்றார்.


-யாழ். நிருபர் பிரதீபன்-

No comments

Powered by Blogger.