Header Ads



கல்வியைத் தொடர விபசாரத்தில் ஈடுபட்ட 18 யுவதிகள் கைது


(வீரகேசரி)


உயர் கல்வியை தொடர்வதற்குப் பணம் சம்பாதிப்பதற்காக விபசாரத்தில் ஈடுபட்ட  18  யுவதிகள் தலங்கமவில் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.


பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் உதயகுமாரவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார்.


4 இடங்களில் சோதனை செய்து கைது செய்யப்பட்ட  இவர்களிடம் நடத்திய விசாரணைகளில், தற்போதுள்ள பொருளாதார நிலைமைகள் காரணமாக உயர்கல்வி கற்க முடியாததால் பணம் சம்பாதிப்பதற்கு மனமில்லாமல் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட யுவதிகளாவர்.

No comments

Powered by Blogger.