Header Ads



17, 000 மில்லியன் ரூபா கடன் - தடுமாறும் விவசாய அமைச்சு


அரசாங்கம் செலுத்த வேண்டிய 17000 மில்லியன் ரூபா கடன் தொகையை உடனடியாக செலுத்துமாறு உர நிறுவனங்கள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.


இதன்படி இரசாயன உரங்களை வழங்குவதற்காக 11,000 மில்லியன் ரூபாவும், சேதன உரங்களை வழங்குவதற்காக 6000 மில்லியன் ரூபாவும் அந்தந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


கடந்த வருடம் 4,000 மில்லியன் ரூபா நிலுவைத் தொகை செலுத்தப்பட்ட போதிலும், மேலும் 17,000 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக அந்தந்த உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் உர நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளனர்.


அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் முறைக்கேற்ப உரிய நிலுவைத்தொகை செலுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


இந்த பருவத்தில் நாடு முழுவதும் உரம் விநியோகிக்க அரசாங்கம் 6 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.