Header Ads



சகோதரனை கொன்ற 14 வயது சகோதரன் கைது


களுத்துறை - தேக்கவத்தை பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கி சகோதரனைகக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.


தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரன் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையை பார்ப்பதற்காக அவர்களது தாய் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.


இதன்போது, இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து இளைய சகோதரன் தனது மூத்த சகோதரனை கழுத்தில் கூரிய ஆயுதத்தால் அடித்துள்ளார்.


இதில் தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழந்ததுடன், இளைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.