ஜேர்மனி, இங்கிலாந்து, கனடா, ஸ்பெயின் நாடுகளில் இருந்து வந்த 13 மில்லியன் பெறுமதியான குஷ்
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பல பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான போதை மாத்திரைகள் மற்றும் குஷ் என்ற கஞ்சாவை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஜேர்மனி, இங்கிலாந்து, கனடா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு, பாணந்துறை, பொரலஸ்கமுவ, பாதுக்க, பிலியந்தலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவை போலி முகவரி என தெரியவந்தது. அந்த பார்சல்களில் 207 போதை மாத்திரைகளும், 750 கிராம் குஷ் கஞ்சாவும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 13 மில்லியன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. ibc
Post a Comment