Header Ads



13,200 லீற்றர் டீசலுடன் 80 அடி பள்ளத்துக்குள் பாய்ந்த பௌசர்


- எஸ். கே. குமார் -


நுவரெலியா -பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் இன்று (19)  அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பௌசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும்  காயமடைந்துள்ளனர்.


கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - கெப்பட்டிபொல எரிபொருள் நிலையத்திற்கு டீசல் ஏற்றிச் சென்ற பௌசரே ஹக்கல பூங்கா பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.


சீரற்ற வானிலையால் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 


குறித்த பௌசரில் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


இந்த விபத்தில் குறித்த பௌசர் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.