தேர்தலுக்கு எதிரான மனு - மே 11 க்கு ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துவதற்கான உத்தரவைக் கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் W.M.R விஜேசுந்தர தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்றும் (23) விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அதன்போதே மனுவை மே 11 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு, தேர்தலை ஒத்திவைக்குமாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment