குவைத் நாட்டுக்கு அதிக இரத்த தானம் செய்த நாடுகளில் ஒன்றாக இலங்கை - வெள்ளிக்கிழமை 11 ஆவது இரத்த தான முகாம்
"என்னை ஆளாக்கிய நாட்டுக்கு இரத்த தானம் செய்வோம்" (මට නැගිටින්න අත දුන් රටට ලේ දන් දෙමු ) எனும் சுலோகத்தின் கீழ், குவைத் வாழ் இலங்கையர்களின் சங்கமான இக்ரஃ இஸ்லாமிய சங்கதத்தின் 11 ஆவது வருட இரத்த தான முகாம் நாளை வெள்ளிக்கிழமை (10.02.2023) பி.ப. 2:00 மணி முதல் 6:00 வரை , குவைத், ஜப்ரியா பிரதேசத்தில் அமைந்துள்ள மத்திய இரத்த வங்கியில் ஏற்பாடாகி உள்ளது.
கடந்த வருடம் குவைத் நாட்டுக்கு அதிக இரத்த தானம் செய்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தெரிவாகி மத்திய இரத்த வங்கி மூலம் இக்ரஃ இஸ்லாமிய சங்கம் கௌரவிக்கப்பட்டது.
இன, ஜாதி, மத பேதம் துறந்து இந்த உன்னத நிகழ்வில் கலந்து இரத்த தானம் செய்து பலரது உயிர்களை காப்பாற்றும் அறப் பணியில் தம்மையும் ஈடுபடுத்திக் கொள்ளுமாறு குவைத் வாழ் இலங்கையர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
இக்ரஃ இஸ்லாமிய சங்கம்
குவைத்
09.02.2023
Post a Comment