1000 மில்லியன் நஷ்டஈடு வழக்கு - சமாதானமாக நிறைவு
- Ismathul Rahuman -
ரன்ஜன் ராமநாயக்காவுக்கு எதிராக 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி முன்னால் இராஜாங்க அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்ஸா தாக்கல் செய்த வழக்கு நேற்று நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இனக்கப்பாட்டுடன் சமாதானமாக தீர்த்துவைக்கப்பட்டது.
2014 ஆண்டு மார்ச் 26ம் திகதி நீர்கொழும்பு லெய்டன் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஐதேக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னால் இராஜாங்க அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்க ஆற்றிய உரையால் தனது கெளரவத்திற்கு ஏற்பட்ட அபகீர்தியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி நிமல் லான்ஸா எம்.பி. இவ் வழக்கை தொடுத்திருந்தார்.
இவ் வழக்கு விசாரண இன்று 8ம்திகதி நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி நுவன் தாரக்க ஹீனடிகல முன்னிலையில் இடம்பெற்றது.
இவ் வழக்கை நிரைவு செய்வதற்காக இன்று அழைத்தபோது ரன்ஜன் ராமநாயக்க சார்பாக ஆஜரான சட்டதரணி சந்தேக நபரின் பேச்சில் எச்சந்தர்பத்திலும் முறைப்பாட்டாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் சந்தே கநபரின் பேச்சில் முறைப்பாட்டாளருக்கு மனவேதனை ஏற்பட்டிருந்தால் மனவருத்தத்தை தெரிவிப்பதாக கூறினார்.
சந்தேகநபர் தெரிவித்த மனவருத்தத்தை முறைப்பாட்டாளர் ஏற்றுக்கொள்வதனால் வழக்கை முடிவுக்கு கொண்டுவருமாறு முறைப்பாட்டாளரின் வழக்கறிஞர் மன்றை கோரினார்.
இதனையடுத்து வழக்கு சமாதானமாக நிரைவு செய்யப்பட்டது.
Post a Comment