Header Ads



மஹிந்தவின் மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் பெருந்தொகை தங்கம், ஹோட்டலுக்கு 100 கோடி ரூபா செலவு


மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் பெருந்தொகை தங்கம் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.


மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் தேர்தல் பிரச்சார மேடையில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.


ரோஹிதவின் வளர்ப்பு நாயின் கழுத்தில் சுமார் 90 பவுன் எடையுடைய தங்க செயின் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் திருடிய பணத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


கடந்த 9ம் திகதியன்று வீடுகள் எரிக்கப்பட்ட போது சிங்கராஜாவில் உள்ள ஹோட்டல் ஒன்றும் தீப்பிடித்திருந்தது. அதிலும் அந்த சொகுசு ஹோட்டலுக்கு உரிமையாளர் இல்லை. அதற்கு முன்னரும் உரிமையாளர் இருக்கவில்லை.. தீப்பிடித்தும் மாதக்கணக்கில் உரிமையாளர் இருக்கவில்லை.


ஆனால் நாடாளுமன்றில் நட்டஈட்டுப் பணம் ஒதுக்கப்பட்டதும் உரிமையாளர்கள் வெளியே வந்தார்கள். குறித்த ஹோட்டலுக்கு 100 கோடி ரூபா செலவு காட்டப்பட்டுள்ளது. அதுவும் மக்கள் பணத்தில் ரொக்கட் அனுப்பிய மஹிந்தவின் இளைய மகன் தான்.


திருமணம் முடித்ததும் 36 கோடி ரூபாய் பெறுமதியில் வீடு ஒன்றினை வாங்கினார். அதற்கு அப்பால் உள்ள இரு இடங்களை வாங்கியுள்ளார். ரோஹிதவுக்கு 45 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்து உள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். Tw

No comments

Powered by Blogger.