ஜுன் 1 முதல், 11 பொருட்களுக்கு தடை
எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி முதல், இலங்கையில் சில பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் மற்றும் கிளறிகள், பிளாஸ்டிக் தயிர் ஸ்பூன்கள், தட்டுகள், கோப்பைகள் (தயிர் கோப்பைகள் தவிர), கத்திகள், கரண்டிகள் மற்றும் முட்கரண்டிகள், பிளாஸ்டிக் மலர் மாலைகள், பிளாஸ்டிக் இடியாப்ப தட்டுகள் என்பவற்றுக்கே தடை விதிக்கப்படவுள்ளது.
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய சுற்றுச்சூழல் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையிலேயே இந்த தடை விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி முதல் இலங்கையில் குறித்த பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் பயன்பாடு அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment