Header Ads



சவூதி அரேபிய நிறுவனத்துக்கு விற்கப்பட்டது WWE


சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம், அமெரிக்காவின் பிரபல மல்யுத்த விளையாட்டான WWE வை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


WWE இன் இணை-தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்த ஸ்டெபானி மக்மஹோன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தபிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக, வின்ஸ் மக்மஹோன் தனது ஓய்வு முடிவை கைவிட்டு, மீண்டும் WWE குழுவின் தலைவராக திரும்பியுள்ளதாகவும், நிறுவனத்தை பொதுப் பங்குச் சந்தையில் இருந்து விலக்கி மீண்டும் ஒரு தனியார் வணிகமாக மாற்றுவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. WWE என்பது உலகம் முழுவதும், மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் மிகப்பெரிய தொழில்முறை  நிறுவனமாகும்.

1 comment:

  1. விற்றவர்கள் கோடிக்கணக்கான டொலர்களை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்வார்கள். வாங்கியவர் அதனைத்தான் எதற்காக வாங்கினார் என சிந்திக்க முன்பு வியாபாரம் முற்றாக முடிவு பெறும். இறுதியாக வாங்கியவருக்கு எஞ்சியிருப்பது கபோதி மட்டும்தான் என்பது அவர் விளங்கிக் கொள்ள நீண்ட காலம் எடுக்கும். அப்போது விற்றவரின் உள்நோக்கம் நிறைவேறி அவர்களின் இலக்கு நிலையாகச் சென்று கொண்டிருக்கும். இதனைத்தான் அல்குர்ஆன் اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏ செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- இரத்தினச்சுருக்கமாகக் கூறிவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.