மேயர் பதவி யாருக்கென அறிவிக்காத UNP
கொழும்பு மாநகர சபைக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்புமனுக்கள் இன்று கையளிக்கப்படடதுடன் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள அணியில மேயர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என தெரியவருகிறது.
இதனடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு தகுதியான நபரை கட்சி தீர்மானிக்கும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
தேர்தலில் வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கை உட்பட முழு தேர்தல் செயற்பாடுகளிலும் வேட்பாளர்களின் செயல்திறனுக்கு அமைய மிகவும் பொருத்தமான நபர மேயர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
Post a Comment