UNP மேயர் வேட்பாளர், பைசர் முஸ்தபாவா..?
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவைக் களமிறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் இன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே பைசரைக் களமிறக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரான பைசர் முஸ்தபா, அக்கட்சியில் அனைத்துப் பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தைக் கட்சி தலைவருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அதேவேளை, கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக முஜிபூர் ரஹ்மானைக் களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. TW
Post a Comment