Header Ads



TNA யும், விக்னேஸ்வரனும் அரசாங்கத்தின் கைக்கூலிகள் - உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின் வழக்குகள் மூலம் இழுத்தடிக்கலாம்


இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை சந்திக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலளார் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என நோக்காது, ஆட்சி மாற்றத்திற்கான முன்னேற்பாடாக இதனைக் கருதி வாக்களிக்க வேண்டும் எனக் கோரினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது.


தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க முற்படலாம்.


நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதாக இருந்தால் நிலையான அரசாங்கம் அமையவேண்டுமென சர்வதேச நிதி நிறுவனங்கள் விரும்புகின்றன.


நாடாளுமன்ற தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவது நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும்.


ஒற்றையாட்சிக்குள் ஏக்கியராஜ்ஜியவை ஏற்றவர்கள் 13ஆம் திருத்ததை ஏற்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் வாக்குபெறுவதற்காக தற்போது தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்கிறார்கள்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி சிறிலங்கா அரசாங்கத்தின் கூலிகள் -  போலித் தமிழ் தேசிய வாதிகள் இவர்களை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” - என்றார்.


No comments

Powered by Blogger.