Header Ads



அம்பாறை SLMC செயற்குழு கூட்டம், மரச் சின்னத்தில் போட்டி என ஹக்கீம் அறிவிப்பு, ஹரீஸும் பங்கேற்பு




(சர்ஜுன் லாபீர்)


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டச் செயற்குழு கூட்டம் இன்று(10) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் சம்மந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு தேர்தலில் களம் காண்பது பற்றியும் எதிர்கால கட்சியின் செயற்திட்டங்கள் பற்றியும் தெளிவாக கலந்தலோசிக்கப்பட்டது.


மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும் என்பதனை கட்சியின் தலைவர் பகிரங்கமாக அறிவிப்பு செய்தார்.


இந் நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ்,பைசால் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர்,அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், செயளாலர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள்,கட்சியின் அம்பாறை மாவட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.