Header Ads



இம்தியாஸ் Mp, சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதம்


பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்காக தன்னால் சமர்ப்பிக்கக்கப்பட்ட தனிநபர்  பிரேரணையை இரண்டாவது மதிப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கடிதம் மூலம் இன்று(05) தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களை இதன் பிரகாரம் திருத்துவதற்கான பரிந்துரைகளை அமைச்சு வழங்காததாலும்,அதற்கான கால அவகாசம் ஜனவரி 14 ஆம் திகதியுடன் முடிவடைவதாலும்,இது தொடர்பான விவாதத்தை ஜனவரி 14 ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் நடத்துமாறும் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கேட்டுக்கொண்டார்.


பாராளுமன்றம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனிநபர் பிரேரணையில் இருந்து உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்திற்கான அமைச்சின் பரிந்துரையை மாத்திரம் இன்று (5) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாக்கிர் மாக்கார் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.



No comments

Powered by Blogger.