MM மொஹமட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான எம்.எம் மொஹமட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது .
ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு தமக்கு தொலைபேசியில் நேற்றிரவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் Hiru செய்தி சேவைக்கு தெரிவித்தார் .
குறித்த தொலைபேசி ஊடான அச்சுறுத்தல் தொடர்பில் , குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளமையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் .
முன்னதாக ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் , அவர்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது
Post a Comment