'பேஸ்புக் Live இல் வந்த நாமலுக்கு, மக்களிடமிருந்து எதிர்ப்பும், கேலியும்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று (16) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக ‘பேஸ்புக் லைவ்’ என்ற வசதியின் கீழ் பொதுமக்களுடன் உரையாட வருகை தந்தார்.
இதன்போது நாமல் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் தயார் என ஏற்கனவே அறிவித்திருந்தார் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மக்களிடம் இருந்து எதிர்பாராத கேள்விகள் கிடைத்தன .
கருத்து பத்தியில் ‘நாமல் ராஜபக்ச நலம் பெறட்டும்’ என பலரும் பதிவிட்டிருந்தனர். மேலும், லைவ் வீடியோவுக்குக் கிடைத்த பெரும்பாலான பதில்கள் வீடியோவை கேலி செய்வதாக இருந்தன
Post a Comment