Header Ads



திருடனை JVP யே ஆட்சிக்கு கொண்டு வந்தது, VIP சோசலிஸவாதிகள் நாட்டுக்கு வேண்டாமென்கிறார் சஜித்


ராஜபக்சவினருக்கு துணைபோகும் VIP சோசலிசவாதிகளை விட மனிதநேயமிக்க தலைவரே நாட்டுக்குத் தேவை.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பதியத்தாலவ மக்கள் சந்திப்பில் தெரிவிப்பு.


மக்களை நேசிக்கும்,மக்களின் துயரங்களை அறிந்து,அந்த துயரங்களை உணர்ந்து, மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் தலைமையே தேவை எனவும்,அந்த தலைமையை வழங்கும் திறன் ஐக்கிய மக்கள் சக்தியிடமுள்ளதாகவும்,பிரேண்டட் உடைகளை அணிந்து கொண்டு தமது பிள்ளைகளை வெளிநாட்டில் படிப்பிக்கும் VIP  சோசலிஸவாதிகளுக்கு மக்கள் படும் துன்பம் புரிவதில்லை எனவும்,பல்வேறு சந்தர்ப்பங்களில் சுனாமி திருடர்களை ஜனாதிபதியாக்க அவர்கள் உதவியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  பதியத்தலாவையில் தெரிவித்தார்.


அவர்களும் ஒன்றே,இவர்களும் ஒன்றே எனக்கூறும் இந்த VIP சோசலிஸவாதிகள் 2005 இல் மஹிந்தவின் அரசாங்கத்தில் பல அமைச்சரவை அமைச்சுகள் மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்தனர் எனவும், சுனாமி திருடன் என முத்திரை குத்தப்பட்ட மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர அவர்கள் உதவியதே அதற்குக் காரணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை இந்நிலையில் அழித்த ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டு வர VIP சோசலிஸவாதிகள் பாடுபட்டனர் என்றாலும்,தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி எச்சந்தர்ப்பத்திலும் ராஜபக்சக்களை ஆட்சிக்கு கொண்டு வரவோ அல்லது அதிகாரத்தை பலப்படுத்தவோ ஒத்துழைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.