ஜனாதிபதியும் ஏனையோரும் நடனமாடுகிறார்கள்
சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வது என்பது சாதாரண மக்களுக்கு குறைந்த அழுத்தத்தை கொடுப்பதானதாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது வரிகளை சுமத்தி, ராஜபக்சர்கள் திருடிய பணத்துக்கான வந்தியை மக்களிடமிருந்தே அறவிட்டுக்கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டு மக்கள் மீது எந்த அழுத்தமும் இல்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்தை கையாளுமாறே 220 இலட்சம் மக்களும் எதிர்பார்ப்பதாகவும், தற்போதைய ஜனாதிபதியும் ஏனையோரும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு நடனமாடிக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகளை அழிக்கும் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலையாக விவசாயிகளின் விளைச்சலை விற்கக்கூடிய நல்ல சந்தை வாயப்பொன்று இல்லாதது தான் எனவும், விவசாயியைப் பாதுகாக்க,விவசாயியை அரவணைக்கும்,சாதாரண மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ளும் பிரேமதாஸ சகாப்தத்தை உருவாக்குவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று(31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment