இலங்கைக்கு வந்த FBI உளவு அதிகாரி நியூயோர்க்கில் கைது
அமெரிக்க உளவுப் பிரிவான FBI யின் முன்னாள் அதிகாரி ஒருவர் நியூயோர்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவில் பலம் வாய்ந்த வர்த்தகர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் Charles McGonigal என்ற இந்த முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை Charles McGonigal இலங்கைக்கு விஜயம் செய்து நாடு திரும்பும் போது நியூயோர்க்கில் உள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment