வரகாப்பொல CLC நிறுவனத்தில் மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு
வரகாப்பொல பிரதேசத்தில் இயங்கி வரும் பெண்கள் பாடசாலையான CLC நிறுவனத்தில் மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் தேசமான்ய அல்ஹாஜ் மௌலவி M.S.M. தாஸீம் கலந்து சிறப்பித்தார்.
அந்நிகழ்வின் போது CLC நிறுவனத்தின் 2021 உயர்தரப் பரீட்சையில் கேகாலை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி செல்வி இல்மா அன்வர் அவர்களுக்கு சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது.
மேலும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெற்ற 40 இற்கும் மேலான மாணவிகளுள் மருத்துவத் துறைக்கு தெறிவு செய்யப்பட்ட 6 மாணவிகளும் கௌரவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாற்பது மாணவிகளும் கௌரவிக்கப்பட வேண்டிவர்களே.கௌரவிப்பு,பரிசளிப்புகள் உண்மையில் ஏனைய மாணவிகளை ஆர்வமூட்டும் செயற்பாடுகள்.அள்ளாஹ் த ஆலா தங்களின் செயற்பாடுகளை பொருந்திக் கொள்வானாக
ReplyDelete