கொரோனாவின் புதியவகை கண்டுபிடிப்பு 'கிராகன்' என பெயர் சூட்டல்
கிராகன் என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனாவின் புதிய உப பிறழ்வானது உலகளாவிய ரீதியில் பரவிவருவதாகவும் அதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் தொகை அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் உப பிறழ்வான XBB1.5 எனப்படும் கிராகன் தொற்றினால் அமெரிக்காவில் 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிறழ்வினால் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மூவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment