Header Ads



ஜனாதிபதியும், அமைச்சரவையும் மன்னிப்புக் கோர வேண்டும்.


சாதி, மதம், குலம் மற்றும் கட்சி வேறுபாடின்றி அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட தற்போதைய அமைச்சரவையால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்த நேற்று அமைச்சரவை சட்டவிரோதமாக தீர்மானித்துள்ளதாகவும், தற்போதைய நிறைவேற்று அதிகாரமும் அமைச்சரவையும் ஒன்றிணைந்து மக்களின் அடிப்படை உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இதனால்,சமூகத்தில் எழுந்த சர்ச்சையினால்,அந்த முடிவை மாற்றிக் கொள்ள நேரிட்டாலும்,இந்தத் தவறுக்காக அமைச்சரவை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும்,நாடாக நாம் இவ்வாறான விபரீதமான செயற்பாடுகளை மேற்கொள்ளாது,புதிய தொழிநுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (11) கதிர்காமத்தில் தெரிவித்தார்.


அதேபோன்று, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், கணினியை சொந்தமாக்குவதற்கான ஏற்பாடு வழங்கப்படுமென்றும், இந்நாட்டின் எதிர்காலம் அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக அமைய வேண்டும் எனவும்,அதற்கான தகவல்,கற்பித்தல்,மற்றும் தரவுகளுக்கான அணுகல் கிடைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


வங்குரோத்தான நாட்டில் நிதியில்லை,பிறகு பார்ப்போம் என்ற கதைகள் இன்றி,எமது இயலுமை மற்றும் முயற்சியின் அடிப்படையில் இந்நாட்டின் கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு கூடிய பெறுமானத்தைச் சேர்க்க முடிந்ததாகவும்,எதிர்க்கட்சியாக இருந்தும், அதிகாரம் இல்லாவிட்டாலும், அமைச்சுப் பதவிகள், ஜனாதிபதி பதவிகள், பிரதமர் பதவிகள் எதுவுமின்றி மக்களுக்காக பல்வேறு பணிகளைச் செய்ததாகவும்,74 வருட கால எதிர்க்கட்சியின் வகிபாகத்தை முழுமையாக மாற்றி மக்களுக்குப் பெரும் சேவை செய்து மத்தியஸ்தமான பாதையில் செல்ல முடிந்ததாகவும்,எதிர்க்கட்சியில் இருந்தும் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதை நடைமுறையில் காட்டியுள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு பல்வேறு அலைவரிசைகளுக்கு பேட்டி கொடுப்பது  மட்டுமின்றி சம்பிரதாயக் கட்டமைப்பை தாண்டி மக்களுக்கு பெரும் சேவை செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்நாட்டின் ஆட்சியாளர்கள்,  ஆட்சியாளர்களை வணங்கும் அடிமைக் கூட்டத்தையே இதுவரை உருவாக்க விரும்பினாலும்,பிரபஞ்சம் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம்,படித்த தலைமுறை, ஸ்மார்ட் இளைஞர்கள் மற்றும் சிறந்த ஆளுமை கொண்ட குடிமக்கள் தலைமுறையை உருவாக்குவதே தற்போதைய எதிர்க்கட்சியின் நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


நாட்டையே தீக்கிரையாக்கும் தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை எனவும், தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு டொலர்கள் தேவை எனவும்,அந்த டொலர்களைக் கொண்டு வரக்கூடியவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவது மக்களின் பொறுப்பு என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இல்லை,முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் பிரச்சினைகள் ஒருபோதும் தீர்க்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கோரும் தீர்வை வழங்கும் திறன் தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


இந்தப் பேரூந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் போது சில தரப்பினர் கடுமையாக விமர்சிப்பதாகவும்,இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு அவர்களும் தங்கள் உதவிகளை நல்க வேண்டியதையே செய்ய வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இவ்வளவு இரக்கமின்றி விமர்சிப்பவர்கள் மக்களுக்கு எந்தப் பணியையும் செய்ததில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


எனவே,யார் விமர்சித்தாலும்,யார் சேறுபூசினாலும் இந்த பிரபஞ்சம் திட்டத்தை நிறுத்த முடியாது எனவும்,250 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இதுவரை பேரூந்துகளைக் கோரியுள்ளன எனவும்,இந்த இலக்கு கடினமாக இருந்தாலும் எப்படியாவது எட்டுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 68 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று  கதிர்காமம் ஜனாதிபதி மத்திய கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் இன்று (11) அன்பளிப்புச் செய்யப்பட்டது.இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.