மாகாணத் தேர்தலை விரைவாக, நடத்துவது மிக முக்கியமானது - இந்தியா
இந்த ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பிரசன்னமாகியிருந்தார்.
இலங்கையுடனான ஒற்றுமையை வௌிப்படுத்துவதே தமது இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.
வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்களை நேற்று மாலை சந்தித்த இந்திய வௌியிறவுத்துறை அமைச்சர், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து கட்டியெழுப்புவதற்காக 4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியா கடந்த ஆண்டு வழங்கியிருந்ததாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அண்டை மற்றும் பங்காளி நாடு எனும் அடிப்படையில், இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் இந்த வருடம் அவதானம் செலுத்தப்படுவதாகவும் செயலூக்கமுள்ள படிமுறைகளை மேற்கொண்டு இலங்கை மீண்டெழுவதற்கான உறுதிப்பாட்டை கடன் வழங்குநர்கள் வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கூறினார்.
ஏனையோருக்காக காத்திருக்காது கடன் மறுசீரமைப்பிற்கான உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்குவதன் மூலம் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இலங்கையின் உறுதிப்பாட்டை பேணுவது மாத்திரமல்லாது, கடன் வழங்குநர்களையும் சமாந்தரமாக கையாள்வது இந்தியாவின் நோக்கம் என இந்த ஊடகசந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
சிறந்த முதலீடுகளின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப வேண்டுமெனவும் இலங்கையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு இந்தியா அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்.
கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை தாமதமின்றி வழங்குவதாகவும் இதனை சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிப்பதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதேவேளை, 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது மிகவும் முக்கியமானது எனவும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.
Post a Comment