மட்டக்களப்பில் காத்திருந்த அதிர்ச்சி
-கனகராசா சரவணன் -
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு 145 வேட்பு மனுக்கள் தாக்குதல் செய்யப்பட்டுள்ளன.
இதில், இரண்டு அரசியல் கட்சிகள், நான்கு சுயேச்சைகள் உட்பட ஆறு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய இருகட்சிகளும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை என மாவட்ட உதவி தெரிவத்தாட்சி ஆணையானர் எம்.பி.எம் சுபியான் நேற்று முன்தினம் (22) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபைக்கும் நகரசபைகளான காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் பிரதேச சபைகளான ஓட்டமாவடி, வாகரை, வாழைச்சேனை, கிரான், ஏறாவூர், வவுணதீவு, களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை ஆகிய 12 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுதாக்கல் இடம்பெற்றது
இதில் தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜக்கிய தேசிய கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட பல சுயேச்சைக் குழுக்கள் உட்பட 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 12.15 மணிக்கு கச்சேரிக்கு வந்த நிலையில் அவர்களை உள்ளேவிடவில்லை.
அதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர், வேட்பாளர் பட்டியலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு எடுத்துக்கொண்டு வந்திருந்தபோது, வாகனம் விபத்தில் சிக்கியதால் பிற்பகல் இரண்டு மணிக்கே கச்சேரிக்கு வரமுடிந்த காரணத்தால் வேட்பு மனுதாக்கல் செய்யமுடியாமல் போயுள்ளதாக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் சந்திரகுமார் கூறியது, வேட்புமனுப் பட்டியல்/தாள்களை ஒப்படைக்காததற்கு ஒரு நல்ல காரணமாக இருக்க முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர், வேட்பாளர் பட்டியலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு எடுத்துக்கொண்டு வந்தபோது, வாகனம் விபத்து நடந்த இடத்திலிருந்து, உடனடியாக வேறொரு வாகனத்தில் பட்டியலைக் பெற ஏற்பாடு செய்திருக்கலாம். அதுதான் செயல்திறன். இந்த உள்ளூராட்சி சபைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெறச் செய்ய சில நேர்மையற்ற சக்திகளின் சதி நடந்ததா? கட்சியின் தலைவர் மற்றும் கௌரவ. பசில் ராஜபக்ஷ இதை தீவிரமாக கவனிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteNoor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice".