நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து, வரி அறவிட தடை
மறு அறிவித்தல் வரை இந்த இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, முற்பணம் சார்ந்த வருமான வரியை ஆட்சேபித்து இலங்கை நீதிச் சேவைகள் சங்கம் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா, தம்மிக்க கனேபால ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதிகளின் சம்பளம் , கொடுப்பனவுகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ நியூஸ்ஃபெஸ்டிற்கு கூறினார்.
மேல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எடுத்துக் கொண்டு அடுத்ததாக நீதிமன்றம் செல்லக் காத்திருப்பவர்கள், அமைச்சரையின் மந்தி(ரி)கள் தான். அந்த உதாரணத்தைப் பின்பற்றி அடுத்தடுத்தவர்களும் நீதிமன்றம் சென்றால் இறுதியாக எஞ்சியிருப்பது பசியுடனும் பட்டினியுடனும் வாழும் பொதுமக்கள். அவர்களிடம் எல்லா வரிகளையும் திணித்துவிட்டால் நாட்டின் பொருளாதாரப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
ReplyDelete