Header Ads



முஸ்லிம் வேட்பாளர்களுக்குரிய, அடிப்படைத் தகைமைகள் என்ன..?


உள்­ளூ­ராட்சி மன்றம், மாகாண சபை, மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த விரும்பும் வேட்­பா­ளர்­க­ளுக்­கு­ரிய அடிப்­படைத் தகை­மைகள் தொடர்­பான ஓர் ஆரம்ப வரைவை தேசிய தளத்தில் பணி­யாற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், சமூகத் தலை­மைகள், ஆய்­வா­ளர்கள் மற்றும் சமுக ஆர்­வ­லர்கள் உள்­ளிட்ட சுயா­தீ­ன­மான ஒரு குழு தயா­ரித்­துள்­ளது.


நாட­ளா­விய ரீதியில் முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சுமார் 30 சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நிகள், 300 புத்­தி­ஜீ­விகள் மற்றும் சமூக ஆர்­வ­லர்­க­ளதும் கருத்­துக்­களை உள்­ள­டக்­கிய குறித்த வரைவு ஆவணம்  கொழும்பு மன்­ட­ரினா ஹோட்­டலில் நடை­பெற்ற அமர்வில் மக்கள் பிர­க­ட­ன­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. வேட்­பா­ளர்­க­ளுக்­கு­ரிய அடிப்­படைத் தகை­மைகள், பண்­புகள், பெறு­மா­னங்கள், சமூக அர்ப்­ப­ணிப்பு, தேசிய மற்றும் சமூகப் பொறுப்­புக்கள் ஆகிய விட­யங்­களை உள்­ள­டக்­கிய ‘ஒரு சிறந்த அர­சியல் வேட்­பா­ளரின் தகை­மைகள்’ எனும் இந்தப் பிர­க­டனம் ‘மன்­ட­ரினா பிர­க­டனம்’ என அழைக்­கப்­ப­டு­கி­றது.


காத்தான்குடியில் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்….


அதனைத் தொடர்ந்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் மன்­ட­ரினா பிர­க­ட­னத்தை அமுல்­ப­டுத்­து­வதில் ஒத்­து­ழைப்பு வழங்க தயா­ராக உள்­ள­தாக அனைத்து உறுப்­பி­னர்­களும் .ெதரிவித்­தனர். இது தொடர்­பான அடுத்­த­கட்ட நகர்­வாக தேசிய அர­சியல் கட்­சி­க­ளு­டனும், தேசிய அமைப்­புக்­க­ளு­டனும் இணைந்து செயற்­ப­டு­வது தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.


உள்­ளூ­ராட்சி மன்றம், மாகாண சபை மற்றும் பாரா­ளு­மன்ற தேர்தல் வேட்­பா­ளர்கள் பின்­வரும் அடிப்­படைத் தகை­மை­களைக் கொண்­டி­ருத்தல் வேண்டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது:


ஆண் – பெண் இரு­பா­லாரும் இலங்கைப் பிர­ஜை­யாக இருத்தல் வேண்டும்.


இரண்டாம் நிலை (க.பொ.த –உ /த) கல்வித் தகை­மையைக் கொண்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். ஏதா­வது ஒரு துறையில் டிப்­ளோமா மட்ட அல்­லது உயர் கல்வி (பட்டம்) பெற்­றி­ருப்­பது பய­னு­டை­யது.


நேர்மையுடன் கூடிய சிறந்த பண்­பு­களை வெளிக்­காட்டும் ஆற்­ற­லு­டை­ய­வ­ராக இருத்தல் வேண்டும்.


குற்­ற­வியல் வன்­செ­யல்­க­ளுக்­காக தண்­டிக்­கப்­பட்ட பதி­வுகள் இல்­லா­த­வ­ராக இருத்தல் வேண்டும்.


மது­பானம், போதைப் பொருள், சூதாட்டம், கசினோ, பந்­தயம் கட்டல் உள்­ளிட்ட சமூக விரோத வியா­பா­ரங்­களில் தொடர்­பு­ப­டாமல் இருத்தல்.


தனிப்­பட்ட வருவாய் தொடர்­பாக பொறுப்­புக்­கூற இய­லு­மா­ன­வ­ரா­கவும் தனது சொத்­துக்கள் பற்­றிய விப­ரத்தை வெளிப்­ப­டை­யாக பிர­க­டனம் செய்ய ஆயத்­த­மா­ன­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும்.


தன்­னார்வ சேவை சங்­கங்கள், அமைப்­புக்கள், சமய நிறு­வ­னங்கள், தொண்டு நிறு­வன ஈடு­பாடு ஊடாக மக்கள் மேம்­பாட்­டிற்­காக உளத்­தூய்­மை­யுடன் சேவை­செய்யும் ஆற்றல் உள்­ள­வ­ராக இருத்தல்.


நாட்டில் மற்­றைய இன சமூக பிர­தி­நி­தி­க­ளுடன் இணைந்து பணி­யாற்றும் ஆற்­ற­லு­டை­ய­வ­ராக இருத்தல்.


அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் என்­பது மக்­க­ளு­ட­னான ஒரு உடன்­ப­டிக்­கை­யாகும் (பைஅத்). எனவே தகு­தி­யா­ன­வர்கள் மக்கள் அங்­கீ­கா­ரத்­துடன் கள­மி­றக்­கப்­ப­டு­மி­டத்து நாட்டில் நீதியும் நியா­யமும் நிலை­நி­றுத்­தப்­படும். அதே­போல அரச சொத்­துக்­களும் தொழில் முயற்­சி­களும் பொறுப்­புடன் நெறிப்­ப­டுத்­தப்­படும். இந்தப் பின்­ன­ணியில் அனைத்து வேட்­பா­ளர்­களும் தமது பொருத்­தப்­பாடு மற்றும் தமது தகை­மை­களை தாமா­கவே முதலில் பரீட்­சித்து, அதனை குறித்த பிர­தேச சமூக அமைப்பின் ஊடாக உறு­தி­செய்­து­கொள்ள வேண்டும். அவ்­வாறு அடிப்­படை தகைமை உறு­தி­செய்­யப்­பட்ட வேட்­பா­ளர்­களை அர­சியல் கட்­சிகள் அல்­லது சுயா­தீனக் குழுக்கள் மீள்­ம­திப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்தி உரிய முறையில் வெளிப்­படைத் தன்­மை­யுடன் புள்­ளி­களை வழங்கி தகை­மை­மிக்க வேட்­பா­ளர்கள் .ேதர்தலில் போட்­டி­யிட அனு­ம­திக்­கப்­ப­டு­வதை உறு­தி­செய்­வதே இந்த மன்­ட­ரினா பிர­க­ட­னத்தின் நோக்­க­மாகும்.


மிகவும் தகு­தி­யான வேட்­பா­ளர்­களை தெரிவு­செய்யும் சுய­ம­திப்­பாய்வு வினாக்­கொத்­தா­னது அடிப்­படைத் தகை­மைகள், கல்வித் தகை­மைகள், தொழில்­வாண்மை மற்றும் அனு­பவம், ஆளுமை திறன்கள் மற்றும் வெற்றி பெறு­வ­தற்­கான வாய்ப்பு எனும் பிர­தான அங்­கங்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.


TEAM 2023 எனும் பெயரில் இணைந்து செயற்­படும் இந்த சமூக ஆர்­வலர் குழுவில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர், முள்ளாள் வெளி­நாட்டு தூது­வர்­க­ளான ஒமர் காமில் மற்றும் ஜாவிட் யூசுப், போர்ட் சிட்டி ஆணைக்­குழு அங்­கத்­தவர் மற்றும் சர்­வ­தேச கணக்­காய்­வாளர் றியாஸ் மிஹ்ழார், முன்னாள் உப வேந்தர் பேரா­சி­ரியர் நாஜிம், தேசிய மற்றும் சர்­வ­தேச வர்த்­தக சமூ­கத்தைச் சேர்ந்த மிஸ்வர் மகீன், அப்சல் மரிக்கார், முஹம்­மது நவாஸ், சஹீட் சங்­கானி, பங்குச் சந்தை நிபுணர் இம்­தியாஸ் புஹா­ருதீன், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி நத்வி பஹா­வுதீன், மருத்­து­வத்­துறை கலா­நி­தியும் விஷேட வைத்திய நிபுணருமான றுவைஸ் ஹனீபா, சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஆதில் ஹஷீம், சமூக ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களான நவாஸ் முஹம்மத், ஹில்மி அஹமட், வை. ஐ. எம். ஹனீஸ், றூமி மற்றும் எம். அஜிவதீன் ஆகியோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.


தேசிய நலனை இலக்காகக் கொண்டு ஒரு சிறிய குழுவினால் கட்சி அரசியலுக்கு அப்பால் முன்னெடுக்கப்படும் இந்தப் பணியின் வெற்றி தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவு மற்றும் சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் பூரண உத்துழைப்பிலேயே தங்கியுள்ளது.– Vidivelli

No comments

Powered by Blogger.