இலங்கையின் வாழைப்பழங்களை ருசிக்க, சீனர்களுக்கு அரிய வாய்ப்பு
இலங்கையில் விளைவிக்கப்படும் பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆரம்ப கலந்துரையாடல் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது
இங்கு உரையாற்றிய விவசாய அமைச்சர், இலங்கையில் விளையும் அன்னாசி, மாம்பழம், ஃபேஷன் பழம் மற்றும் வாழை போன்ற பழங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமாக உள்ளன. தற்போது பல தனியார் நிறுவனங்கள் பழங்களை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டு வருகின்றன.
இலங்கை வாழைப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக பல வருடங்களுக்கு முன்னர் சீன அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும் இதுவரையில் அந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாததால் அதனை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் விளைவிக்கப்படும் பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Post a Comment