மைத்திரிக்கு கடும் தண்டனை வழங்குக
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கான முழு தவறையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இழப்பீடு வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நாட்டுக்கும் நீதி வழங்க முடியாது என்பதால் முன்னாள் ஜனாதிபதிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு சிறிசேனாவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று -உத்தரவிட்டுள்ளது.
Post a Comment