ரணிலுக்கு மோடி அனுப்பியுள்ள அழைப்பிதழ்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அனுப்பிவைத்துள்ள அழைப்பிதழை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போதே, இந்தியா ஒரு நம்பகமான அண்டை நாடாகவே இலங்கையுடன் செயற்படுகின்றது, அதேபோல் நம்பகமான பங்குதாரர் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இலங்கையுடனான நட்புறவை பலப்படுத்தி நெடுந்தூரம் செல்ல தயாராக இருக்கின்றோம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேவைப்படும் எந்த நேரத்திலும் நாங்கள் இலங்கைக்கு ஆதரவாக நிற்போம் எனவும் கூறியுள்ளார்.
Post a Comment