Header Ads



கொழும்பில் உள்ள, துருக்கி தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை


சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பிற்கான நேர்முகம் என சமூக ஊடகங்களில் போலிவிளம்பரம் செய்து பெருமளவானவர்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தை நம்பி நாட்டின் பல பாகங்களில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொழும்பில் ஜே.ஆர் ஜெயவர்த்தன நிலையத்திற்கு சென்றுள்ளனர்.


எனினும் அவர்களை அங்கிருந்தவர்கள் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டதுடன் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.


அமைச்சர்மனுசநாணயக்கார இதனை உறுதி செய்துள்ளார்.


சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை வெளியிட்டு மூன்றாம் தரப்பொன்று இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


துருக்கியில் வேலைவாய்ப்பு என தெரிவித்து சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டே பொதுமக்களை குறிப்பிட்ட தரப்பினர் ஏமாற்றியுள்ளனர்.


துருக்கியில் சில வேலைவாய்ப்புகள் உள்ளன ஆனால் இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் மனுசநாணயக்கார  இவ்வாறான போலி விளம்பரங்களை நம்புவதற்கு பதில் உத்தியோகபூர்வமாக வெளியாகும் அறிவிப்புகளை பொதுமக்கள் நம்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதேவேளை துருக்கியில்வேலைவாய்ப்பு குறித்த இந்த விளம்பரத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என இலங்கைக்கான துருக்கி தூதரகம் தெரிவித்துள்ளது.


துருக்கியின் உள்துறை அமைச்சிற்கும் இந்த விடயத்தில் எந்த தொடர்புமில்லை தூதரகம் தெரிவித்துள்ளது.


துருக்கி இலங்கையிலிருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என சில பிழையான தகவல்கள் வெளியாவது குறித்து அறிந்துள்ளோம்,இது தனிப்பட்ட சிலர் நபர்கள் ஏற்பாடு செய்துள்ள விடயம் போல தெரிகி;ன்றது என தூதரகம் தெரிவித்துள்ளது. (வீரகேசரி)

No comments

Powered by Blogger.