அம்பாறையில் கடும் மழைக்கு மத்தியில் வேட்பு மனுத்தாக்கல்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு-அம்பாறையில் கடும் மழைக்கு மத்தியில் வேட்பு மனுத்தாக்கல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி புதன்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று(21) நண்பகலுடன் நிறைவடைந்தது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு கடும் மழைக்கு மத்தியில் வேட்புமனுக்களை தாக்கள் செய்துள்ளன.
ஐக்கிய மக்கள் கட்சி (சஜித் பிரேமதாச) தேசிய மக்கள் கட்சி ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையிலான ஐக்கிய காங்கிரஸ் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக்கட்சி பொதுஜன பெரமுன ஈபிடிபி ஐக்கிய தேசிய கூட்டமைப்பு (தராசு சின்னம்) உள்ளிட்ட சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனுத்தாக்கல்களை மேற்கொண்டிருந்தன.
இதன்படி அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 உள்ளுராட்சி மன்ற சபைகளுக்கு மேற்படி கட்சிகள் உட்பட சுயேட்சைக்குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவேளை கட்டுப்பணத்தை வைப்பிலிட்ட நாள் முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சுமார் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த மாவட்ட செயலகத்தை சுற்றி பொலிஸார் கடும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment