Header Ads



டிப்பருடன் மோதி, இளைஞர் பலி


கலென்பிந்துனுவெவ – அனுராதபுரம் பிரதான வீதியில் ஹிம்புதுகொல்லாவ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிள் ஒன்று, டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் தற்போது கலென்பிந்துனுவெவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கலென்பிந்துவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.


டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் சாரதி இன்று கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.