பாடசாலை பாதுகாப்பு ஊழியர் படுகொலை
- ஷேன் செனவிரத்ன -
கண்டி- புனித சில்வெஸ்டர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்துக்கு பொறுப்பான பாதுகாப்பு ஊழியர் ஒருவர், கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று(17) அதிகாலை 5 மணியளவில் மைதானத்துக்கு வருகைத் தந்த பாடசாலை மாணவன் ஒருவர் பாதுகாப்பு ஊழியர் கை, கால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு ஏனையவர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த பொலிஸார் இவரது கொலைக்கான காரணம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment