Header Ads



முகமது சிராஜ், பாபர் ஆசம் முதலிடம்


நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியை இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. 


இதன் மூலம் அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த தொடர முடிவடைந்த பின்னர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. 


இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 2 இடம் உயர்ந்து 6 இடத்துக்கு முன்னேறி உள்ளார். 


விராட் கோலி ஒரு இடம் இறங்கி 7 வது இடத்துக்கு வந்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ரோகித் 9 இடத்துக்கு முன்னேறினார். 


பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் முகமது சிராஜ் முத்ல் இடத்துக்கு முன்னேறினார்.


ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதல் இடத்திலு, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் வான் டெர் டுசென், டிகாக் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.


No comments

Powered by Blogger.