Header Ads



இவரை கண்டால் அறியப்படுத்துங்கள்


கடந்தாண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போன கெங்கல்லை, அம்பகோடயைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.


குறித்த சிறுமி பாடசாலை முடிந்தும் வீடு திரும்பவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சிறுமி பாடசாலை முடிந்ததும் மற்றுமொரு  மாணவியுடன்  புகையிரதத்தில் கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.


மற்றைய சிறுமியை ரயிலில் இருந்த இளைஞர் ஒருவர் பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில், இந்த சிறுமி காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.


இந்த சிறுமி தொடர்பில் தகவல் கிடைப்பின் கீழ் உள்ள எண்களுக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தெல்தெனிய பொலிஸ் – 081-2374073


OIC தெல்தெனிய – 071 – 8591066

No comments

Powered by Blogger.