மைத்திரிபால கோரிய மன்னிப்பை ஏற்க முடியாது – கத்தோலிக்க திருச்சபை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் கத்தோலிக்க சமூகத்திடமும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெற்றமைக்காக மன்னிப்புக் கோரினார்.
கத்தோலிக்க சமூகம் என்மீது வெறுப்பு கொள்ளவில்லை. எனது 15 ஆவது வயதில் பைபிள் படித்தேன். மற்றவர்கள் செய்த தவறால் இன்று இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது பதவிக் காலத்தில் இது போன்ற சம்பவம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
வழக்கின் மீதான நீதிமன்றத் தீர்ப்பில் அவர் குற்றம் செய்ததாகக் கூறவில்லை என்றார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஏதேனும் கடுமையான தவறு செய்தால், அந்த தவறுக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும். அதுதான் இந்த வழக்கிற்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்றார்.
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க சமூகத்திடம் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என சமூக தொடர்புக்கான தேசிய கத்தோலிக்க பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.
Post a Comment