புத்தகம் எழுதப் போகிறேன்...!
சிறை அனுபவங்களை வைத்து புத்தகம் எழுதும் நம்பிக்கை இருப்பதாகவும், தற்போது வழக்கம் போன்று தனது தொழிலை நடத்தி வருவதாகவும் திலினி பிரியமாலி தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலி தற்போது பிணையில் வெளியில் இருக்கின்றார்.
இந்நிலையில் சுமார் ஒன்பது நிதி மோசடி வழக்குகளில் முன்னிலையாவதற்காக இன்று காலை(11.01.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் சிறை அனுபவங்களை வைத்து புத்தகம் எழுதும் நம்பிக்கை இருக்கின்றது. தற்போது வழக்கம் போன்று எனது தொழிலை நடத்தி வருகின்றேன் என கூறியுள்ளார்.
நிதி மோசடி குற்றச்சாட்டில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை எதிர்வரும் 16ஆம் திகதி கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment