ஜனாதிபதி ரணிலின், அதிரடி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எந்தவொரு தேர்தல் நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை நேற்று மாலை கொழும்பில் சந்தித்த போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்துக்குள் நாட்டை அதள பாதாளத்தில் இருந்து மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த ஆணையை மீறி செயற்பட தாம் ஒருபோதும் தயாராக இல்லை என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின், அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் செயற்குழுக் கூட்டத்தின் தலைமைப் பதவியை மரபு ரீதியாக மாத்திரம் ஏற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment